ஸ்ரீரங்கம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் நடத்தும் 6 ம் ஆண்டு பூர்ண புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா (எ) ஹரிஹர புத்திர ஐயப்ப திருக்கல்யாண அழைப்பிதழ்.
அன்புடையீர் வணக்கம்
நிகழும் மங்களகரமான ஸ்ரீ ஜெய வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி அன்று பூர்ண புஷ்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயப்ப திருக்கல்யாணம் ஸ்ரீரங்கம், அம்மாமண்டபம் ரோடு, பழைய சந்திரிகா மண்டபத்தில் நடைபெறுவதால் பொதுமக்களும், ஆன்மிக தொண்டர்களும், ஐயப்ப பக்தர்களும், ஐயப்ப குருசாமிகளும் வருகைபுரிந்து ஐயப்பனின் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரையும் வரவேற்கும்
ஸ்ரீரங்கம் ஐயப்ப குருசாமிகள் மற்றும் திருக்கல்யாணம் கமிட்டி நிர்வாகிகள்
முக்கிய குறிப்பு: திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் திருக்கல்யாணத்தில் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி இவைகளை முன்னதாகவே பதிவு செய்து கொண்டு சங்கல்ப ஹோமத்தில் கலந்துகொண்டால் கண்டிப்பாக திருமண பாக்கியம் கிடைக்கும். ஐயப்பனின் அருளை பெற்றுக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment